ஆலய குரு

ஸ்தானிக குருமுதல்வர் சிவஸ்ரீ ச. நடராஜசர்மா அவர்கள் வழங்கிய ஆசிச்செய்தி 'அத்தி முகத்தவனை நித்தம் நினைப்பவர் சித்த மகிழ்வோடு முக்தி... thumbnail 1 summary
ஸ்தானிக குருமுதல்வர் சிவஸ்ரீ ச. நடராஜசர்மா அவர்கள் வழங்கிய ஆசிச்செய்தி

'அத்தி முகத்தவனை நித்தம் நினைப்பவர்
சித்த மகிழ்வோடு முக்தி பெறுவாரே'

வட்டுக்கோட்டை, மூளாய் வீதி உடுக்கைவளைப் பதியில் கோவில் கொண்டு கொலுவிருக்கும் ஸ்ரீமகா கணபதி நாடி வரும் பக்தர்கள் துயர்துடைத்து திருவருள் பொலியும் கருணாமூர்த்தியாக திகழ்பவர். உடுக்கியவளையில் தோன்றிய விநாயகர் நாதவடிவாக இச்சந்நிதியில் திருவருட்காட்சி கொடுத்தருளி பக்தர்களுக்கு பல அற்புதற்களைப் புரிபவர். 'ஸத்ஜன நிபிடி கிருதர்' என்ற திருநாமத்தின் தத்துவத்துக்கு அமைவாக தனக்கென உரிய சீரடியார் குழாத்தின் பக்தியால் பீடிக்கப்படுபவர். சிறப்புமிக்க இந்திருக்கோவிலில் தற்போது பல உயர்வுகளை நாம் காணமுடிகிறது.  இதில் ஒன்றாக எதிர்வரும் நாட்களில் திருக்கோவில் திருப்பணி மிக உயரிய முறையில் முன்னெடுக்கப்பட இருப்பதும். அதன் நிறைவில் பெருஞ்சாந்தி காணவிருப்பதும் நாம் அனைவரும் செய்து கொண்ட பெரும்பாக்யமே ஆகும். இத்தகைய வளர்ச்சிக்கு எதுவாகவும், கால நடைமுறைக்கும் ஏற்ப திருக்கோயில் மீது இணைத்தளம் ஆரம்பிக்கப்படுவது மேலும் சிறப்பை ஏற்படுத்துவதோடு திருக்கோயில் சம்பந்தமான தகவல்களை இந்நாட்டவரும், எந்நாட்டவரும் அவ்வப்போது தெரிந்து கொள்ளும் ஒரு ஆன்மீக ஊடகமாகவும் அமையப் பெற்றுள்ளது.

மேலும் பல ஆன்மீக சிந்தனைகளை சைவப்பெரு மக்களிடையே கொண்டு செல்லும் ஒரு சேவையாகவும் விளங்குகின்றது. உடுக்கியவளை விநாயகப் பெருமானின் மகத்தான திருவருட் பொலிவு இவ் இணையத்தளம் மூலமாக திக்கெட்கும் பரவி நிற்கட்டும். நிகழும் இவ் ஆன்மீகப்பணி சிறக்க உடுக்கைவளையான் திருவருளோடு கூடிய ஆசிகளை நல்கி மகிழ்கிறேன் எல்லோரும் இன்புற்றிருக்க பிராத்திப்போமாக.

சுபம்.
15.01.2016